Description
12ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்புலவர் ஔவையாரால் இயற்றப்பட்ட நீதிநூல் ஆத்திசூடி.
“ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே”
ஆத்திப்பூமாலையை அணிந்த சிவபெருமானின் மனம் விரும்பும் விநாயகக் கடவுளை எப்பொழுதும் வணங்குவோம் எனத் தொடங்கும் ஆத்திசூடி காப்புச்செய்யுளுடன் 109 ஒற்றைவரி பாடல்களுடன் எழுதப்பட்டுள்ளது.
நல்லொழுக்கத்தை எளிமையான முறையில் கற்பிக்க மிகவும் ஏற்ற நூல் ஆத்திசூடி.ஆகையால் இளம்பருவத்திலேயே பெற்றோரும் ஆசிரியரும் ஆத்திசூடியை குழந்தைகளுக்கு மனதில் பதியும்படி கற்பிக்க வேண்டும்.
குழந்தைகளின் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் நாங்கள் வடிவமைத்துள்ள இப்புத்தகத்தின் மூலம் ஆத்திசூடியுடன் உயிரெழுத்துகளையும் மெய்யெழுத்துகளையும் மிகவும் எளிமையாக படிப்போரின் மனதில் பதியச்செய்வதே எங்களின் நோக்கமாகும்.
Reviews
There are no reviews yet.